தமிழகம் 264 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கோரியிருந்த நிலையில் 177.25 டி.எம்.சி. மட்டுமே திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தீர்ப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன், தமிழகத்திற்கான காவிரி தண்ணீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டுவிட் செய்துள்ளார்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்,
’’நிலம் நனையத் தண்ணீர் கேட்டோம்;
நதி நனைய மட்டுமே கிடைத்திருக்கிறது.
தீர்ப்பை ஏற்றுக்கொள்வது ஒருபுறம்;
எதிர்கொள்வது மறுபுறம்.
என்ன செய்யப் போகிறோம்?
தீர்ப்பா - தீர்வா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.