Skip to main content

கார் பந்தயத்தில் விபத்து; ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

An accident in a car race; Hotel owner lost their live

 

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் கார் பந்தயத்தில் ஈடுபட்ட கார் பந்தய ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

 

சென்னையைச் சேர்ந்த தனியார் உணவகத்தின் உரிமையாளர் குமார். இவர் கார் ரேஸ் மீது கொண்ட ஈடுபாடு காரணமாகத் தொடர்ச்சியாக கார் பந்தயங்களில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார் பந்தயத்தில் கலந்து கொண்டார். இந்தப் பந்தயத்தில் எதிர்பாராத விதமாக அவர் ஓட்டிச் சென்ற காரானது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உணவகத்திற்குள் திடீரென புகுந்த கார்; தூக்கி வீசப்பட்ட பெண்மணி

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
 woman was thrown when the car went out of control and entered the restaurant

வேலூர் அடுத்த பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் அதே பகுதியில் சாலையோரம் சிறிய அளவில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மதியம் 2 மணியளவில் பென்னாத்தூர் நோக்கி கார்த்திக் என்பவர் வேகமாக கார் ஓட்டி வந்துள்ளார். குடும்பத்தோடு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு வந்துள்ளார். அந்த கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பழனியின் உணவகத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது அங்கு வேலை செய்துகொண்டிருந்த பெண் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தவர் மூர்ச்சையாகிப் போனார்.

அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள், அக்கம்பக்க கடைக்காரர்கள் பொதுமக்கள் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அடிப்பட்ட பெண்மணியை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த வேலூர் தாலுக்கா காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காரை ஓட்டி வந்த கார்த்திக் என்பவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும் எதிரே இருந்த வேகத்தடையை கவனிக்காமல் காரை வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“கிளாம்பாக்கத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்” - அமைச்சர் சேகர்பாபு தகவல்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Affordable restaurant soon in kilambakkam Minister Sekarbabu 

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிதாக காவல் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (05.02.2024) நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு  கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும். இந்த உணவகத்தில் வழங்கப்படும் உணவு  தரமானதாக இருக்கும்.

Affordable restaurant soon in kilambakkam Minister Sekarbabu 
கோப்புப்படம்

கோயம்பேட்டில் இருந்து பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்திற்கு இடம் மாற்றம் செய்யும் போது கோயம்பேட்டில் 32 கடைகள் இருந்தன. அந்த 32 கடைகளுக்கு உரிய உரிமையாளர்களை கணக்கிட்டால், மொத்தம் 11 பேர் தான் உரிமையாளர்கள் ஆவர். இந்த 11 உரிமையாளர்களுக்கு கிளாம்பாக்கத்தில் மலிவு விலையில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி ஏப்ரலில் நிறைவு பெறும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவித அடிப்படை வசதியை செய்துள்ளோம் வெகு விரைவில் மக்களுக்கு பயன்தரும் வகையில் ஏடிஎம் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.