Skip to main content

பா.ஜ.க.விலிருந்து விலகி காங்கிரஸில் இணையும் அப்துல் கலாம் அண்ணன் மகன்

Published on 28/07/2018 | Edited on 28/07/2018
kalam

 

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மூன்றாம் ஆண்டு நிணைவு அஞ்சலி நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 27 ந் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளரும் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவருமான மக்கள் ராஜன் தலைமை வகித்தார். இதில் அப்துல் கலாமின் உடன் பிறந்த சகோதரரான முஸ்தபா கமல் மராக்காயரின் மகன் ஹாஜா செய்யது இப்ராஹிம் கலந்து கொண்டு அப்துல் கலாமின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

 

தொடர்ந்து அவர் கூறும்போது "கடந்த இரண்டாண்டு களுக்கு முன்பு நான் பா.ஜ.க.வில் சேர்ந்தேன் எனக்கு அகில இந்திய சிறுபான்மை பிரிவு செயலாளராக பொறுப்பு கொடுத்தார்கள். பா.ஜ.க.வின் செயல்பாடுகள் மக்களிடம் பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அக்கட்சியில் தொடர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. பா.ஜ.க.விலிருந்து விலகி விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளேன். மாநில தலைவர் திருநாவுக்கரசரை சந்தித்து அவர் மூலம் தேசிய தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளேன்" என்றார்.

  

சார்ந்த செய்திகள்