இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது மூத்த சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் குடும்பத்தினர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செ.முருகேசன், தர்மர், சுந்தரபாண்டியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், தங்கதமிழ்செல்வன், முத்தையா, மாரியப்பன் கென்னடி, மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் உட்பட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.
அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அப்துல்கலாம் பிறந்தநாளை அரசு விழா அறிவிக்க வேண்டும். மிகவும் எளிமையான மனிதர் என்றார். இவரது வருகையால் இராமேஸ்வரம் முழுவதும் அதிகளவில் தொண்டர்கள் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. ஒரு சில இடங்களில் வாகன செல்லுவதில் காவல்துறைக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாலாஜி.