
சேலம் கிழக்கு தபால் கோட்டத்தில் உள்ள சேலம் தலைமை தபால் நிலையத்தில், ஆதார் சேவை சிறப்பு முகாம் வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. விரைவான சேவையை வழங்கும் வகையில் 3 கவுண்ட்டர்கள் தொடங்கப்பட்டு உள்ளன. புதிதாக ஆதார் அட்டை இலவசமாக எடுத்துத் தரப்படும். பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாலினம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
பயோமெட்ரிக் பதிவுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் அதற்கு உரிய சான்றுகளுடன் ரேஷன் ஸ்மார்ட் கார்டு, தபால் நிலைய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆயுள் காப்பீடு சான்றிதழ், கல்வி நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு வர வேண்டும். செல்போன், மின்னஞ்சல் மாற்றம் செய்ய எந்த ஒரு அடையாள ஆவணமும் தேவையில்லை.
கரோனா தொற்று அபாயம் உள்ளதால் முகாமிற்கு வருவோர், முகக்கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு தபால்துறை அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை தபால்துறை கண்காணிப்பாளர் பஞ்சாபகேசன் தெரிவித்துள்ளார்.