/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/strike.jpg)
சிதம்பரம் அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கலை கல்லூரிகள். தொழிநுட்ப கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் பணிநிரவல் செய்யப்பட்டுள்ளனர். பணிநிரவல் பெற்ற ஊரியர்கள் கடந்த நான்கு அண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் அதேபோல் தற்போது 88 ஆசிரியர் இல்லாத செமி ஸ்கில்டு ஊழியர்களை பணி மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் வாங்க மறுத்து தற்போது கரோனா காலம் என்பதால் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று பணியில் சேர முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பணி மாறுதலை 3 மாதம் தள்ளி வைக்க வேண்டும் எனப் பதிவாளரிடம் மனு கொடுக்க அவரது அலுவலகத்திற்கு சென்றனர். பதிவாளர் இல்லை என்பதால் அனைவரும் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “3 மாதம் தள்ளிவைக்க முடியாது. ஊழியர்கள் போக்குவரத்து இல்லை என்று அச்சமடைந்துள்ளனர். செப் 1-ந் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கும், போக்குவரத்தும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே போக்குவரத்து வசதி இல்லை என்றால் கொஞ்சம் நேரம் எடுத்துகொண்டு அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் பணியில் சேரலாம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)