Skip to main content

பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை; அலறி துடித்த தாய்...

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

8 days old baby passes away due to his father worse activity

 

சிதம்பரம் அருகே சக்கங்குடி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் கிழக்கு தெருவில் வசிக்கும் ராஜீவ் - சிவரஞ்சினி தம்பதியினருக்கு கடந்த 11 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் சிவரஞ்சனிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (17.02.2021) இரவு 11 மணிக்கு அவர்களது வீட்டில் குடிபோதையில் இருந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

 

அப்போது குழந்தைக்கு மனைவி சிவரஞ்சனி பால் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது கணவர், “குழந்தையைக் கொடு, நான் பார்த்துக்கொள்கிறேன்” என குழந்தையை வாங்கி மின்விளக்கை அணைத்து, குழந்தையின் கழுத்தை அழுத்தி தரையில் தூக்கி அடித்துள்ளார். திடீர் சத்தத்தைக் கேட்டு உடனே மின்விளக்கை போட்ட மனைவிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. குழந்தையின் மூக்கிலும் வாய்லும் ரத்தம் கசிந்துள்ளது. குழந்தைக்குப் பேச்சு மூச்சில்லாமல் இருந்ததைக் கண்டு தாய் தலையில் அடித்துக்கொண்டு அலறித் துடித்தார். இதனைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடிவந்து குழந்தையை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 

பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். பிறந்து 8 நாளே ஆன குழந்தையை, பெற்ற தந்தையே குடிபோதையில் தரையில் தூக்கி அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து சம்பந்தப்பட்ட கணவர் ராஜீவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.