
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் இன்று 5,950 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,196 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மூன்றாவது நாளாக 1000க்கும் அதிகமான கரோனா தொற்று பதிவாகி உள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 3,38,055 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 6,019 ஆக உள்ளது. இதன்மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,78,270 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக உள்ளது. இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,766 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70,450 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 37,11,246 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.