
7 கன்டெய்னர் லாரிகள் தொடர்ச்சியாக தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களாக தமிழகத்தில் சுருக்குமடி வலையைப் மீன்பிடிக்கபயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஒரு தரப்புமீனவர்களும், சுருக்குமடி வலையைப்பயன்படுத்தஅனுமதிக்க கூடாது என ஒரு தரப்பு மீனவர்களும் கடலுக்குள் இறங்கி, படகுகளில்கறுப்புக்கொடி கட்டி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை, சீர்காழி அருகே தடை செய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாக புகார் எழுந்த நிலையில், 7 கன்டெய்னர்களில் கொண்டுசெல்லப்பட்ட மீன்களைஅதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கண்டெய்னர்களை தடுத்து நிறுத்தியதால் மீனவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களுடன் போலீசார் சமாதானபேச்சுவார்த்தை நடத்தி வரும்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)