
சேலம் அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்ன கவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது கொண்டலாம்பட்டியிலிருந்து பெருந்துறைக்குச் சென்ற ஆம்னி வேன், லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த கொடூர விபத்தில் வேனில் பயணித்த ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி அருண் கபிலன் மற்றும் போலீசார் விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.