Skip to main content

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள்!

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
6 new medical colleges in Tamil Nadu

தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் புதியதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 இடங்களில் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை, திருப்பத்தூர் மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்த மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக பெரம்பலூர், அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 3 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதே சமயம் காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்களிப்போடு அமைக்கப்படும் இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணவும் தேசிய மருத்துவ ஆணையத்தின் சார்பில் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Tamil Nadu MPs take oath in Lok Sabha

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 40 எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றனர். அந்த வகையில் சசிகாந்த் செந்தில், டி.ஆர்.பாலு, ஆ.ராசா எஸ். ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், மாணிக்கம் தாகூர், கே.சுப்பராயன், தொல்.திருமாவளவன், கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த், சி.என். அண்ணாதுரை, சு.வெங்கடேசன், செல்வ செல்வகணபதி, விஷ்ணு பிரசாத், கே.நவாஸ்கனி, க.செல்வம், விஜய் வசந்த், ரவிக்குமார், மலையரசன், ஈஸ்வரசாமி, சுதா, ராணி ஸ்ரீ குமார், கோபிநாத், மாதேஸ்வரன், சச்சிதானந்தம், செல்வராஜ், ராபர்ட் புரூஸ், வைத்திலிங்கம், ஆ.மணி, தரணிவேந்தன், கணபதி ராஜ்குமார், பிரகாஷ், துரை வைகோ, முரசொலி, அருண் நேரு, தங்க தமிழ்ச்செல்வன் என 39 பேரும் பதவியேற்று கொண்டனர். 

Tamil Nadu MPs take oath in Lok Sabha

இவர்களில் பலரும் கையில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி உறுதிமொழி எடுத்தனர். குறிப்பாக “தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்துக...” என வலியுறுத்தி திருவள்ளூர் தொகுதி எம்.பி. சசிகாந்த் தாஸ் பதவியேற்றார். நீட் தேர்வு வேண்டாம், நீட் தேர்வை தடை செய்ய வேண்டும்” என முழக்கமிட்டு தமிழில் மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டும் திமுக எம்.பி.க்கள் பதவியேற்றனர். அதோடு சிலர், ‘வருங்காலம் எங்கள் உதயநிதி’ எனக் கூறியும் பதவியேற்றனர். 

Next Story

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Chance of rain in 9 districts

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகையச் சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக  மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், தருமபுரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் திருவள்ளூர் ஆகிய 9 மாவடங்களில் இன்று (11.06.2024) இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.