/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1000_258.jpg)
ஈரோடு விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 55). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அண்ணாதுரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றதால், கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அண்ணாதுரை மது குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டதால், குடித்துவிட்டு வீட்டுக்குள் வரக்கூடாது என்று ராஜேஸ்வரி கண்டித்துள்ளார்.
அதனால் அண்ணாதுரை கோபித்துக் கொண்டு, சின்ன செட்டிபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவ்வப்போது மகளைப் பார்ப்பதற்காக வீட்டுக்குச் சென்று பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம்குடிபோதையில் தாய் வீட்டுக்குச் சென்ற அண்ணாதுரை, அறைக்குள் சென்று தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர், அண்ணாதுரையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அண்ணாதுரை இறந்துவிட்டதாகத்தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)