Published on 18/10/2021 | Edited on 18/10/2021

தமிழ்நாட்டில் 5 காவல் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் சங்கர் ஜிவால் தொடர்ந்து சென்னை காவல் ஆணையராக பணியாற்றுவார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வீட்டுவசதி கழகத்தின் டிஜிபியாக தொடர்வார். டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஆபாஷ்குமார், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவில் தொடர்வார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சீமா அகர்வாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.