திருப்பத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷின் அக்கா மருமகன் நவீன். திருப்பத்தூர் நகரில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். அவர் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூபாய் 40 லட்சம் ரொக்கம் சிக்கியது. பல ஆவணங்கள் சிக்கியுள்ளன.
திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளரான கலியபெருமாளுக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா எனநவீனை அழைத்துச் சென்று, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.