Skip to main content

மாடுகளால் நிகழ்ந்த கோர விபத்து; ஒன்றன் பின் ஒன்றாக மோதிய 4 வாகனங்கள்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

4 vehicles collided one after the other

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நான்கு வாகனங்கள் தொடர்ச்சியாக மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திமனம் என்ற பகுதியில் சாலையில் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பெட்ரோல் ஏற்றி வந்த ஒரு லாரியானது வேகமாக வந்தது. அந்த பகுதியில் திடீரென சாலையை மாடுகள் வேகமாக கடந்தது. இதனால் லாரி உடனே பிரேக் போடப்பட்டு நிறுத்தப்பட்டது. அப்போது வேகமாக பின்புறம் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. நான்கு வாகனங்கள் தொடர்ச்சியாக மோதிக் கொண்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டது.

 

இதில் விபத்தில் சிக்கிய கார் ஒன்று முழுமையாக நொறுங்கியது. காரை தொடர்ந்து வந்த இரண்டு அரசு பேருந்துகளும் மோதியது. கார் நொறுங்கி முழுமையாக சேதம் அடைந்த போதிலும், எந்த ஒரு உயிர்ச்சேதமும் இன்றி காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 5 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிராக்டர் மீது கார் மோதி விபத்து; 4 பேர் உயிரிழப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Accident involving a car hitting a tractor; 4 people lost their lives

திருவண்ணாமலை அருகே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த கார் டிராக்டர் மீது மோதியதில் காரில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் சின்னகாங்கேயனூர் பகுதியில் ஆந்திர பதிவு எண் கொண்ட ஒரு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரின் ஓட்டுநர் கண் அயர்ந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்ற நிலையில் இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

இதில் காரில் பயணித்த அழகன், பாண்டியன், பிரகாஷ், சிரஞ்சீவி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் வந்தவர்கள் திருமண நிகழ்ச்சி ஒன்றிக்காக வந்திருந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Next Story

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்; கணவன் மனைவி உள்பட மூன்று பேர் பலி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Three persons, including a husband and wife, were passed away for road accident

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நாயக்கனேலி கிராமத்தை  சேர்ந்தவர் கட்டிட வேலை செய்யும் (மேஸ்திரி) சாமிநாதன் (55), இவரது மனைவி மகாலட்சுமி (45). இவர்கள் இருவரும் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள சோலாபூரி அம்மன் கோவில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட வேலை செய்யும் (மேஸ்திரி) சௌந்தர்ராஜன் மற்றும் 17 வயதான பிரிதிவிராஜ் இருவரும் பெரிய ஏரியூரில் நடைபெற்ற எருது விடும் விழாவைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். 

சாமிநாதன் ஓட்டிவந்த வாகனமும் செளந்தர்ராஜன் ஓட்டி வந்த வாகனமும் அரிமலை கூட்டுச்சாலை அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். இதில், சாமிநாதன் அவரது மனைவி மகாலட்சுமி, சௌந்தர்ராஜன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் இருந்த பிரித்திவிராஜ்ஜை அப்பகுதி மக்கள் ஓடிவந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர், உடனடியாக மூன்று பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பக்தியோடு வந்தவர்களை பலி வாங்கிட்டியே உனக்கு கண் இல்லையா ஆத்தா என குடும்பத்தினரும் உறவினர்களும் அழுத அழுகை பொதுமக்களையும் கலங்க வைத்தது.