திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அடையபலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி விநாயகம் - செல்வி தம்பதியினருக்கு தனுஷ்கா(5), கார்த்திகா(10) என்ற மகளும் உள்ளனர். இதில் கார்த்திகா 3ம் வகுப்பு படித்து வருகின்றார். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயி குப்பன் - அஞ்சலி தம்பதியினருக்கு மோகன்(12) என்ற மகனும், வர்ஷா (8) என்ற மகளும் உள்ளனர். இதில் மோகன் 7ம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் அடையபலம் கிராமத்தில் உள்ள தனுஷ்கா(5), கார்த்திகா(10), மோகன்(12), வர்ஷா(4) ஆகியோர் ஓன்றுணைந்து வேடந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஏரி அருகே கிரிக்கெட் விளையாட சென்ற இளைஞர்கள் ஏரிகரை மீது துணி இருந்ததைக் கண்டு ஏரியில் இறங்கித் தேடினர். இறுதியில் தனுஷ்கா(5) கார்த்திகா(10) மோகன்(12) வர்ஷா(4) என்ற சிறுவன் உள்பட 3பெண் குழந்தைகள் சடலமாக மீட்டனர்.
பின்னர் தகவலறிந்த வந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 4பேரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓரே கிராமத்தில் 4குழந்தைகள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.