கடலூரில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி மற்றும் மனைவியின் சகோதரி மற்றும் இரண்டு பச்சிளம் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே உள்ளது வெள்ளிப்பிள்ளையார் கோயில் தெரு. இந்த பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்-தமிழரசி தம்பதியினருக்கு அஸ்வினி என்ற குழந்தை இருக்கிறது. தமிழரசியின் அக்கா தனலட்சுமி குடும்பப் பிரச்சனை காரணமாக, சகோதரி தமிழரசி வீட்டில் தங்கி இருந்துள்ளார். அப்பொழுது தனலட்சுமியின் கணவர் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார்.
தகராறின் போது தனலட்சுமியின் கணவர்ஆத்திரத்தில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் தமிழரசி, தனலட்சுமி, எட்டு மாதப் பெண் குழந்தை அஸ்வினி மற்றும்இன்னொரு பச்சிளம் குழந்தை எனநான்கு பேரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல் துறையினருக்கும்தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு பச்சிளம் குழந்தைகள்உட்படநான்கு பேர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.