
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் கோவில் குளத்தில்குளித்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ளது சிதம்பரம் சுவாமி மடக்குளம் கோவில். இந்தக் கோவிலுக்குச் சொந்தமான குளம் ஒன்று உள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் இந்தக் குளத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் சபரிமலைக்குச் செல்வோர் குளிப்பது வழக்கம்.
இந்த நிலையில் கேளம்பாக்கம் அருகேயுள்ள சதன் குப்பம்பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் குளிப்பதற்காகக் குளத்தில் இறங்கியுள்ளனர். மூவருக்கும் நீச்சல் தெரியாத நிலையிலும்குளத்தில் இறங்கி குளிக்க முற்பட்டுள்ளனர். குளத்தில் ஆழம் அதிகம் இருந்ததால் மூழ்கி இறந்துள்ளனர்.
இந்நிலையில் உடனடியாக சிறுசேரி தீயணைப்புத்துறையினருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து உதயகுமார்,முகேஷ், விஜய் ஆகிய மூன்று மாணவர்களின் உடலையும் கைப்பற்றினர். தற்பொழுது 3 பேரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குளத்தில் குளிப்பதற்காக இறங்கிய கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)