Published on 22/05/2020 | Edited on 22/05/2020

தமிழகம் முழுவதும் 26 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை பதிவாளர் குமரப்பன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் மதுரை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட நீதிபதி கலைமதி கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், செங்கல்பட்டு மாவட்ட நீதிபதியான அம்பிகா உள்ளிட்ட 26 மாவட்ட நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.