Skip to main content

7 ஆம் தேதி வரை லாரிகள் ஓடாது; தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

25 thousand water trucks will not ply-Private water truck association decision

 

வருகிற ஏழாம் தேதி வரை 25 ஆயிரம் தண்ணீர் லாரிகள் இயங்காது என தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

 

சென்னை பள்ளிக்கரணையை அடுத்துள்ள ரேடியோ சாலை பகுதியில் இரண்டு தண்ணீர் லாரிகள் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றது. அப்பொழுது அனுமதி இல்லாமல் தண்ணீர் பிடிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து பல்லாவரம் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இரண்டு தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். முந்தைய ஆட்சிக் காலத்தில் 2020 ஆம் ஆண்டு மூன்று மாத காலம் மட்டும் தண்ணீர் எடுக்க அனுமதி வாங்கிவிட்டு தற்பொழுது வரை வழங்கப்பட்ட அனுமதியை புதுப்பிக்காமல் தொடர்ச்சியாக நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. அதே நேரம் தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கையில்  “அனுமதியை நீட்டிப்பதற்காக அதிகாரிகளை அணுகிய பொழுது உரிய பதில் தராமல் இழுத்தடிப்புச் செய்கின்றனர்” என்று குற்றச்சாட்டை வைத்தனர்.

 

25 thousand water trucks will not ply-Private water truck association decision

 

இந்நிலையில் பள்ளிக்கரணை ரேடியோ சாலையில் இருக்கக்கூடிய திருமண மண்டபம் ஒன்றில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் அச்சங்கத்தின் தலைவர் நிஜசலிங்கம் என்பவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், வருகின்ற ஏழாம் தேதி திங்கட்கிழமை வரை 25 ஆயிரம் தனியார் தண்ணீர் லாரிகள் ஓடாது என்று அறிவித்துள்ளார். மேலும் எங்களுக்கு முறையான அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.