Skip to main content

கொத்தட்டை கிராம மக்களின் 20 ஆண்டுகால கனவு... கம்யூனிஸ்ட் கட்சியினர் முயற்சியால் நடவடிக்கை எடுத்த சார் ஆட்சியர்!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

The dream of the people of Kottattai village for 20 years ... The Collector who took action by the initiative of the Communist Party

 

சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த 11 இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை அதே ஊரில் இருக்கும் சில ஆதிக்க சமூகத்தினர், இருளர் மக்களை விரட்டியடித்துவிட்டு அந்த இடத்தை  ஆக்கிரமிப்பு செய்தனர். இருளர் மக்கள் அன்றாட குடும்பத்தை பசி பட்டினி இல்லாமல் நடத்தமுடியாத நிலையில் வீட்டுமனைகள் இல்லாமல் அதே ஊரில் சில இடங்களில் நாடோடிகள் போல் வாழ்ந்துவந்தனர். இடத்தை மீட்க பல்வேறு முயற்சிகள் செய்தும் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள இருளர் மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் அவர்களுக்கு வழங்கிய வீட்டுமனையை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

 

இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் அப்பகுதியில் உள்ள இருளர் சமூக மக்கள் அப்போது இருந்த சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் இதே கோரிக்கைக்குப் போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு மற்றும் இருளர் சமூக மக்கள் ஆக்கிரமித்துள்ள வீட்டுமனையை மீட்டுத் தர வேண்டும் என்று மனு அளித்து கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து  சம்பவத்தின் உண்மை தன்மையை அறிந்து சிதம்பரம் சார் ஆட்சியர் துரித நடவடிக்கை எடுத்து, கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிகப்பட்ட இருளர் சமூக மக்களின் வீட்டுமனைகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு அந்த வீட்டுமனைகளுக்குப் பட்டா வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

 

The dream of the people of Kottattai village for 20 years ... The Collector who took action by the initiative of the Communist Party

 

இந்நிலையில், திங்கள்கிழமை (26.07.2021) சம்பந்தபட்ட இருளர் சமூக மக்களுக்கு சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் கலந்துகொண்டு 11 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கினார். பட்டாவைப் பெற்றுக்கொண்ட இருளர் மக்கள், 20 ஆண்டுகால கனவு. இதற்காக பல மனுக்கள் மற்றும் போராட்டங்களை நடத்தினோம் கிடைக்கவில்லை. மனு கொடுத்த சில நாட்களில் இந்த இடத்தைப் பெற்றுத் தந்த உங்களுக்கு அனைவரின் சார்பாக கண்ணீருடன் கை கூப்பி நன்றியை தெரிவித்தனர். சிலர் பட்டாவை கையில் வாங்கியவுடன் மகிழ்ச்சி பொங்க அதே இடத்தில் கைதட்டி கூச்சலிட்டனர். பின்னர் சார் ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்கு சால்வை அனிவித்து நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் புவனகிரி வட்டாட்சியர் அன்பழகன், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு, கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

கடந்த 3 மாதத்திற்கு முன் சாதி சான்றிதழ் இல்லாததால் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதில் சிரமம் உள்ளதாகவும், கல்வி கற்க முடியாமல் பல குழந்தைகள் வீட்டிலே உள்ளதாக மனு அளித்தனர். அதனையும் இவர் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு கொத்தட்டை சுற்றுவட்ட பகுதியில் வசித்த 100க்கும் மேற்பட்டவர்களுகு  சாதி சான்றிதழ் வழங்கினார். இவரது செயல்பாடுகள் அனைத்து மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.