2 cars head-on collision on Bangalore National Highway

ஓசூர் பகுதியைச்சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அசோக், பாபு, திலிப் புருஷோத்தமன், மனோஜ் ஆகியோர் பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் நண்பரின் திருமணத்துக்கு சென்று திருமணம் முடிந்து கொண்டு மீண்டும் ஓசூர் நோக்கி காரில் சென்றுள்ளனர். காரை மனோஜ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார்.

Advertisment

அந்தக் கார் கேத்தாண்டபட்டி அருகே உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளது. திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் நெல்லூர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் மற்றும் இவரது தந்தை ஜெகதீஷ், தங்கராஜின் மனைவி சரண்யா குழந்தைகள் முகில் ஆதி, சிபியுகன் ஆகியோர் திண்டுகள் பகுதியில் இருந்து நெல்லூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். இந்தக் காரை தங்கராஜ் ஒட்டி சென்றார். அப்போது தங்கராஜ் சென்ற கார் திடீரெனகட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு எதிர் திசையில் சுரேஷ் சென்றகார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில். இரண்டு கார்களில் பயணம் செய்த 11 பேர் படுகாயங்களுடன் கார்களில் சிக்கி கொண்டனர்.

Advertisment

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று காரில் சிக்கிக்கொண்ட 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இந்த விபத்தில் சிக்கிய இரண்டு கார்களும் சாலையின் குறுக்கே நின்றதால் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை போலிசார் மற்றும் நாட்றம்பள்ளி போலிசார் விரைந்து வந்து கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக நாட்றம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த அசோக் என்பவர் தலையில் பலத்த காயமடைந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisment