Skip to main content

18 ஆம் நூற்றாண்டை கண்முன் நிறுத்தும் ஓவியங்கள்; அசந்து போன மாணவியர்

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

18th century paintings

 

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்ல மாணவியர் 38 பேர், ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனை, கீழடி அகழ் வைப்பகம் ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாத்துறை மூலம் ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சுற்றுலாவைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா, முத்துராமலிங்கம், மாவட்ட சுற்றுலா அலுவலர் (முகூபொ) கு. அருண் பிரசாத் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

 

18th century paintings

 

மாணவியர் தென்னிந்தியாவிலேயே முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு, கோயில் போன்ற அமைப்பில் கட்டப்பட்ட ராமலிங்க விலாசம் அரண்மனைக்குச் சென்றபோது, ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி, திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் சேதுபதி மன்னர்கள் பற்றி அவர்களுடன் உரையாடினர்.

 

தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு இங்குள்ள ஓவியங்களின் அமைப்பு, இயற்கையான மூலிகை வண்ணத்தில் அவை உருவான விதம், ராமாயண, பாகவத காட்சிகள், சேதுபதிகள் வணங்கிய தெய்வங்களின் உருவங்கள், தஞ்சை மராட்டியர்களுடன் போர்க் காட்சிகள், மன்னர் பவனி வருதல் போன்ற சிறப்புமிக்க ஓவியங்கள் பற்றியும், கி.பி.18-ம் நூற்றாண்டில் இருந்த மக்களின் ஆடை, அணிகலன்கள், காலணி, முக, உடல் அலங்காரங்கள், பயன்படுத்திய ஆயுதங்கள், போர் முறைகள் பற்றியும் ஓவியங்களைக் காட்டி விளக்கினார். ஓவியப் பெண்களின் அலங்காரமும், பெண்களைக் கொண்டு யானை, குதிரையை உருவாக்கிய விதமும் தங்களைக் கவர்ந்ததாகவும்,  அழகான  இந்த ஓவியங்கள் 18-ம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவியதாகவும்  மாணவியர் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்

Warrant for Power Star Srinivasan in check fraud case

ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரின் தொழிலை மேம்படுத்துவதற்காக ரூ.15 கோடி கடன் வாங்கித் தருவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். அதற்கு ஆவண செலவுக்காக ரூ.14 லட்சம் தர வேண்டும் எனக் கூறி, கடந்த 2019ஆம் ஆண்டு முனியசாமியிடம் பெற்றுள்ளார். பின்பு போலியான ஒரு காசோலையையும் கொடுத்துள்ளார். கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்று கொண்ட ரூ.14 லட்சத்தையும் திருப்பி கொடுக்காததால் முனியசாமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து பணத்தை வாங்கிவிட்டு போலி செக் கொடுத்துள்ளதாக சீனிவாசன் மீது முனியசாமி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார் பவர் ஸ்டார். இந்த நிலையில், செக் மோசடி வழக்கில் ஆஜராகாமல் இருந்ததற்காக, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நிலவேஸ்வரன் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

சிதம்பரத்தில் ஆறுமுக நாவலர் 144-வது குருபூஜை விழா

Published on 08/12/2023 | Edited on 08/12/2023

 

Arumugam Navalar 144th Guru Puja Festival at Chidambaram

சிதம்பரம் மேல வீதியில் ஆறுமுக நாவலர் 144 வது குருபூஜை விழா அவர் தோற்றுவித்த சைவ பிரகாச வித்யாசாலையில் பஞ்சபுராண பாடல்களுடன் நடைபெற்றது. விழாவுக்கு ஆறுமுகநாவலர் பள்ளிக்குழு தலைவர் சேது சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிதம்பரம ஷெம்போர்டு நிறுவனரும் பள்ளியின் முன்னாள் மாணவர் விஸ்வநாதன் மற்றும் பள்ளியின் செயலாளர் அருள்மொழிசெல்வன் பள்ளியின் செயல்பாடு மற்றும் ஒழுக்கம், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள், இந்த பள்ளியில் பயின்று பல்வேறு உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார்.

நக்கீரன் சிஎன்சி கைடு நடத்திய பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை ஊடகவியலாளர் அ. காளிதாஸ் வழங்கினார். மேலும் மாநில அளவில் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் நடத்திய விண்வெளி ஆராய்ச்சி திட்ட மாதிரி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பள்ளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை தமிழ் ஆசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக ஞானபிரகாசம் வடக்கு குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழார் கோவிலில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் மருத்துவர் நடராஜன், மரு.பத்மினி கபாலிமூர்த்தி முன்னிலையில் குருபூஜை நிகழ்வு துவங்கி, ஆறுமுக நாவலர் சிலையை, சிதம்பரம் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக மேல வீதியில் உள்ள ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.