1749 nominations filed in Tamil Nadu

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 1403 பேர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதற்கான தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார். 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (28.03.2024) நடைபெற உள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் - 36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் - 56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.