17 year old girl pregnant ... Two arrested!

சிதம்பரம் அருகே பாளையம்சேந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ்(19). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 17 வயதான சிறுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் சிறுமியின் பெரியப்பா மகனான மோகன்ராஜ் (28) என்பவர் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதில் அண்ணன் தங்கை பாசம் முறையற்ற காதலாக மாறியுள்ளது. இதனால் சிறுமி 7 மாதம் கர்ப்பம் ஆகியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை அதிர்ச்சியடைந்து ஒரத்தூர் காவல் நிலையத்தில் சிறுமியின் புகார் அளித்தார். அதில் தனது மகள் கர்ப்பத்திற்குக் காரணமான மோகன்ராஜ் மற்றும் காதலன் ஆகாஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில் ஆகாஷ், மோகன்ராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.