1,635 pending corruption cases-Chennai High Court agony

Advertisment

தேவையில்லாமல் ஊழல் வழக்குகளைத்தள்ளி வைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அண்ணாதுரை என்பவர் ஓய்வூதிய பலன்கள் வேண்டுமென வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த நான்காண்டுகளாக நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் மொத்தமாக 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவற்றை விசாரணை நீதிமன்றங்கள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்.

தேவையில்லாமல் ஊழல் வழக்குகளைத்தள்ளி வைக்கக்கூடாது. ஊழல் வழக்குகளை நீண்ட காலம் தள்ளி வைத்திருப்பது அவற்றை நீர்த்துப் போகச் செய்துவிடும்.அதோடு மட்டுமல்லாமல் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடும். மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தப்பி விடுவார்கள் என நீதிபதிகள் தங்களதுவேதனையை வெளிப்படுத்தினர்.