Skip to main content

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் 16 கிலோ கஞ்சா!

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

nn

 

ஈரோட்டில் அசாம் மாநிலம் திப்ரூகர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் அதிவிரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் 16 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஈரோடு ரயில் நிலையத்தில் வெளி மாநிலம் செல்லும் ரயில்களில் அவ்வப்போது சட்ட விரோதமாகக் கஞ்சா கடத்தல் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. அதைத் தடுப்பதற்காக ரயில்வே குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார், ஈரோடு ரயில் நிலையம் வழியாக வெளி மாவட்டம், வெளி மாநிலம் செல்லும் ரயில்களைச் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல ரயில்வே போலீசார் அசாம் மாநிலம் திப்ரூகர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் அதிவிரைவு ரயில் ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்த போது, ரயில்வே போலீசார் சட்ட விரோத கடத்தல் குறித்து சோதனை நடத்தினர்.

 

அப்போது ரயில் பெட்டி ஒன்றில் கழிவறை அருகில் சந்தேகத்திற்குரிய வகையில் கிடந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, கஞ்சா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து ரயில் பயணிகளிடம் பை யாருடையது என போலீசார் கேட்டறிந்து, யாருடையது என்று தெரியாததால் அதில் இருந்த 16 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீசார் அப்புறப்படுத்தினர். ஓடும் ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் 16 கிலோ கஞ்சா இருந்தது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்