15 people arrested in kallakurichi issue near puthukottai

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணம் குறித்து நீதி வேண்டும் என்று துவங்கிய ஆர்ப்பாட்டம், போராட்டமாக மாறி வன்முறையானது. இதில், காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. காவல்துறை வாகனமும், பள்ளி மற்றும் பள்ளி வாகனங்களும் தீவை வைக்கப்பட்டு பெரும் வன்முறையானது. இதன் காரணமாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு சேதம் விளைவித்தவர்களை காவல்துறையினர் கைது செய்துவருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் ‘புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசமரத்தடியில் 20ம் தேதி புதன் கிழமை காலை 9 மணிக்கு மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த ஒன்று சேருங்கள்’ என்று வாட்ஸ் அப், முகநூல் வழியாக அழைப்பு கொடுத்திருந்தனர். இந்த அழைப்பு வெளியான நிலையில் செவ்வாய்க்கிழமை இரவே சிக்கப்பட்டி, ஆலங்குடி, மாங்கோட்டை உள்பட பல கிராமங்களில் இருந்துசுமார் 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்தவர்களை புதுக்கோட்டை அருகே தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதிகளில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment