Published on 31/05/2020 | Edited on 31/05/2020
தமிழகம் கரோனா பாதிப்பில் மராட்டியத்திற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருந்து வருகின்றது. தமிழகத்தில் நேற்று வரை 20,246 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத அளவாக 874 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று அதையும் தாண்டி 938 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய பாதிப்பையும் சேர்த்து இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21,184 ஆக உள்ளது.
இந்நிலையில் தென் கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தன. பரிசோதனைக்காக தமிழக அரசு சார்பில் 10 லட்சம் பிசிஆர் டெஸ்ட் கருவிகள் ஆர்டர் தரப்பட்டுள்ளன. வரும் வாரங்களில் மேலும் 6 லட்சம் பிசிஆர் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.