![1400 crores more for the development of government schools; Best School Award](http://image.nakkheeran.in/cdn/farfuture/loZkFY05nbIMJXOE8JmPOjLpyhvm1kv6ZLU8qdz4gHI/1669804699/sites/default/files/inline-images/501_47.jpg)
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வகையில் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்று அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு சுமார் ரூபாய் 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதன் பின் முதல்வர் மு.க. ஸ்டாலின், பள்ளிகளின் வளர்ச்சிக்காக நடப்பு ஆண்டிற்குக் கூடுதலாக சுமார் 1400 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டார்.
இத்துடன், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் ‘பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’ என்று பெயர் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.