பல்வேறு எதிர்பார்ப்புகள், ஆலோசனைகளுக்கு அடுத்து இன்று வெளியாகிறது 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது தொடர்பான அறிவிப்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அண்மையில் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட இருக்கிறார்.
மாணவர்கள் அவர்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in,dge.tn.gov.in என்ற தளத்தில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளியில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in இந்த தளத்தில் ஜூலை 22 முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.