Skip to main content

நான்கு மணிநேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கொள்ளையடித்த 12.5கிலோ நகைகள்!! (படங்கள்)

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் வசிக்கும் தன்ராஜ் சொளத்ரி வீட்டில் புகுந்த வடமாநில கொள்ளையர்கள், தாய் மகனை கொலை செய்து விட்டு 12.5கிலோ நகைகள் மற்றும் ரூ. 6.75 லட்சம் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து, தன்ராஜ்க்கு சொந்தமான காரில் தப்பிச் சென்றனர். அப்போது காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதைக் கண்ட கொள்ளையர்கள், காரை பட்டவிளாகம் கிராமத்தின் மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு வயல்வெளியில் புகுந்து அங்குள்ள சவுக்குத் தோப்பில் நுழைந்துள்ளனர். இதைக் கண்ட கிராம மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்த போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனீஷ், ரமேஷ் பாட்டில், மஹிபால் ஆகிய மூவரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சைடிஷ்க்கான போராட்டம்; திக்குமுக்காடிய திருடர்கள்  

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

Thieves stole jewellery house nagai and went away after drinking alcohol there

 

ஆள் இல்லாத நேரத்தில் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், ஃப்ரிட்ஜில் இருந்த ஊறுகாயை வைத்து மது அருந்திய சம்பவம் பொதுமக்கள் மத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள ஆய்மழை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சந்திரகலா. இந்த தம்பதி கடந்த 10ம் தேதியன்று தங்களது வீட்டைப் பூட்டிவிட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து அன்றிரவு உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.

 

அப்போது, அவர்களது வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைரத் தோடுகள் உள்ளிட்ட பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து, சந்திரகலாவின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உடனே அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரகலா, பதறியடித்துக்கொண்டு வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

 

அதுமட்டுமின்றி, கையில் மதுபாட்டிலோடு வந்த கொள்ளையர்கள், ஃப்ரிட்ஜில் இருந்த ஊறுகாயை சைட்டிஷ்ஷாக வைத்துக்கொண்டு, டம்ளர் மற்றும் சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு சாவகாசமாக மது அருந்திவிட்டு அங்கிருந்த நகைகளைக் கூலாகத் திருடிச் சென்றுள்ளனர். மேலும், போலீஸ் தங்களை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக கைரேகை பதியாத அளவிற்குத் தண்ணீரால் துடைத்துவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர், இந்த திருட்டுச் சம்பவம் குறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சந்திரகலா புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Next Story

மாட்டிக்கொண்ட தலை; பறிபோன உயிர்; திருட வந்த இடத்தில் நிகழ்ந்த விபரீதம்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

A thief's head stuck in a door; Tragedy that he passed away at the place where he came to steal

 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கதவில் மாட்டிக்கொண்டு திருடன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் உள்ள சாரநாத் பகுதிக்கு அருகே தனியல்பூர் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் நசீம் என்ற நபர் தனக்குச் சொந்தமாக விசைத்தறி ஆலை வைத்துள்ளார். ஆலையில் போதிய வேலை இல்லாததால் கடந்த இரு நாட்களாக ஆலை மூடப்பட்டு இருந்தது. 

 

இந்நிலையில், இளைஞர் ஒருவர் ஆலையின் கதவிடுக்கில் தலை மட்டும் சிக்கிய நிலையில் உயிரிழந்திருந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்த நபர் ஜாவித் என்ற திருடன் என்பது தெரியவந்தது. 30 வயதான ஜாவீத் பல திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

 

மேலும் விசைத்தறி ஆலையில் திருடும் நோக்கத்துடன் சென்ற ஜாவீத் கதவு உள்பக்கமாக மேல் தாழ்பாழ் போடப்பட்டிருந்த நிலையில் இதை அறியாமல் தலையை உள்ளே விட்டுள்ளார். கதவின் மேல் தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால் கதவை அதற்கு மேல் திறக்க முடியாமல் போயுள்ளது. தலை உள் பக்கமாக சிக்கிக் கொண்டதால் வெளியே எடுக்கவும் முடியாமல் இருந்துள்ளது. 

 

எவ்வளவு முயன்றும் சிக்கிய தலையை வெளியில் எடுக்க முடியாமல் இருந்ததால் கழுத்துப்பகுதியில் இறுக்கம் ஏற்பட்டு ஜாவீத் மூச்சுத் திணறி உயிரிழந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தலை மட்டும் கதவிடுக்கில் சிக்கி விசைத்தறி ஆலைக்குள் இருக்க ஜாவித்தின் உடல் கதவுக்கு வெளியில் இருந்தது. 

 

ஜாவீத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பட்ட நிலையில், மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.