11th class student shocked by police for teasing obesity

அண்மையில் நெல்லையில் சமூகத்தை குறிப்பிடும் வகையில் கையில் கயிறு கட்டிக்கொள்வது தொடர்பான மோதலில் சக பள்ளி மாணவரால் மாணவன் ஒருவன் கற்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் உடல்பருமனை கேலி செய்த மாணவனை 11 ஆம் வகுப்பு மாணவன்வெட்டிகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

11th class student shocked by police for teasing obesity

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சந்தைப்பேட்டைப் புறவழிச்சாலையில் நேற்று முன்தினம் பள்ளி மாணவன் ஒருவன் கழுத்து மற்றும் கை பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். மாணவன் கொலை செய்யப்பட்டிருப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொலைசெய்யப்பட்டது கீரனூரை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவன் கோகுல் என்பது தெரியவந்தது. பிறந்தநாள் விழாவிற்கு சக நண்பர்களுடன் சென்ற கோகுல் கொலை செய்யப்பட்டது அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்த, அவனை பிறந்தநாள் விழாவிற்கு அழைத்து சென்ற சக மாணவனை பிடித்து விசாரித்தபொழுது, தான் பருமனாக இருப்பதை அடிக்கடி கேலி செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளான் அந்த மாணவன். பள்ளி மாணவன் சக மாணவனால் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment