பேராசிரியர் அன்பழகன் பெயரில்தமிழகத்தில் சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்எனதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், பேராசிரியர் அன்பழகன் அவர்களது நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின்திருவுருவச்சிலைநிறுவப்படுவதுடன் அவ்வளாகம் "பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்றும் அழைக்கப்படும். மேலும்கற்றல்கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி பன்முக வளர்ச்சிஎன வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும்'எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, 2020-21 ஆம் கல்வி ஆண்டில் சிறந்தஅரசுபள்ளிகளுக்கான பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. ஒரு மாவட்டத்திற்கும் மூன்று பள்ளிகள் வீதம் மொத்தமாக 114அரசுபள்ளிகள்விருதுக்குதேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது.