Published on 03/06/2020 | Edited on 03/06/2020

தமிழகத்தில் 10 மற்றும் 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தும் முகாம்களாகச் செயல்படும் பள்ளிகளுக்கு மாற்றுத் தேர்வு மையங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்களின் பரிந்துரை அடிப்படையில் பள்ளி மாணவர், தனித்தேர்வரின் தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட தேர்வு மையம் உள்ளிட்ட விவரம் சரியாக இருக்கிறதா? என நாளைக்குள் சான்றிதழ் அனுப்ப உத்தரவிடப்படடுள்ளது. இவ்வாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.