/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/schools3333.jpg)
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு (Unit Test) நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், நடப்பு கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களைப் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்வி தொலைக்காட்சி, ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து ஒவ்வொரு மாத இறுதியிலும் அலகுத்தேர்வு நடத்த வேண்டும் எனவும். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, அதில் வினாத்தாளைப் பதிவிட்டு, விடைகளை எழுதி வாங்கி அலகுத்தேர்வை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாத இறுதியிலும் 50 மதிப்பெண்களுக்கு அலகுத்தேர்வை நடத்துவதோடு, ஜூன், ஜூலை மாத பாடங்களை மீண்டும் ஒருமுறை மாணவர்களுக்கு நினைவூட்டிவிட்டு, அலகுத்தேர்வை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அலகுத்தேர்வுக்கான வினாத்தாளை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து தலைமையாசிரியர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)