Ambulance accident pregnant woman with a baby passed away

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள நெஞ்சத்தூரைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் மனைவியின் பெயர் நிவேதா. 21 வயதான இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில்நிவேதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, இளையான்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் நிவேதாவை 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

Advertisment

இதனையடுத்துநிவேதா 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். நிவேதாவுடன் அவரது தாய் விஜயலட்சுமிமற்றும் இவர்களின் உறவுக்கார பையன் சத்யா ஆகியோர் ஆம்புலன்ஸில் சென்றுள்ளனர். நெஞ்சத்தூரில் இருந்துஊத்திக்குளம் நோக்கி தாறுமாறாக சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ்,திடீரென டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால்அங்கிருந்த மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில்ரத்த வெள்ளத்தில் கிடந்த கர்ப்பிணி நிவேதா மற்றும் அவரது அம்மா விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில்வயிற்றில் இருந்த சிசுவும்உயிரிழந்துள்ளது.

இதனையடுத்துஆம்புலன்ஸ் டிரைவர் மலையரசன், செவிலியர் திருச்செல்வி, சத்யா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதுகுறித்துதகவலறிந்த சிவகங்கை போலீசார்சம்பவ இடத்திற்கு வந்து நிவேதா, விஜயலட்சுமி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கர்ப்பிணி நிவேதா அவரது வயிற்றில் இருந்த குழந்தை மற்றும் அவரது அம்மா விஜயலட்சுஷ்மி ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.