
திருச்சி விமான நிலையத்தில் ரோலர் பேக் பீடிங்கில் மறைத்து எடுத்து வந்த 61 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை கடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், பயணிகளை விமான நிலையத்தில் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு பெண் பயணி மற்றும் ஒரு ஆண் பயணியிடம் சோதனை நடத்தியபோது, அவர்கள் கொண்டு வந்த வீல் வைத்த ரோலர் பை பீடிங்கில் வயர் வடிவில் சுமார் 1 கிலோ 15 கிராம் எடையுள்ள தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதன் மதிப்பு ரூ.61 லட்சத்து 56 ஆயிரத்து 990 மதிப்புள்ள 1 கிலோ 15 கிராம் எனவும் இதனை கடத்தி வந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.