கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்பு எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து அமைச்சரவையை விரிவுபடுத்த பட்டியல் ஒன்றை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலை பாஜக தலைமையிடம் கொடுப்பதற்காக ஆகஸ்ட் 6ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Advertisment

yediyurappa

அப்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும் கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். கர்நாடகவில் பாஜக சீனியர்கள் பலரும் அமைச்சர் பதவி கேட்பதால் யாருக்கு கொடுப்பது என்ற குழப்பம் நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிலிருந்து வந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் பதிவி கேட்டுள்ளதால் அவர்களுக்கும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா உள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவி கேட்டுள்ளதால் என்னசெய்வது என்று குழப்பத்தில் எடியூரப்பா உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் முதல்வர் பதவிக்கு வந்தும் புது சிக்கலில் எடியூரப்பா அரசு உள்ளது. ஒரு வேளை அமைச்சர் பதவி கேட்பவர்களுக்கு கொடுக்காமல் விட்டால் அவர்கள் அரசுக்கு எதிராக செயல்படுவார்கள் என்ற அச்சமும் எடியூரப்பாக்கு வந்துள்ளதாக சொல்கின்றனர்.