Skip to main content

பாஜகவிற்கு எதிராக குரல் கொடுத்ததால் அன்வர் ராஜா நீக்கமா?

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

Will Anwar Raja be fired for speaking out against the BJP?

 

ஜெயலலிதா மறைவிற்கு பின்பு சசிகலாவின் உதவியுடன் பதவியைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, சசிகலாவையே ஓரம்கட்டி பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்தபோதே கடுமையாக விமர்சனம் செய்தவர் அன்வர் ராஜா. 

 

சமீபத்தில் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி அவரது நெருங்கிய வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, ‘அவர் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்தவர். அவருடைய 50 ஆண்டுகால அரசியலில் அவர், தனியாக கோஷ்டியை உருவாக்கியவர் இல்லை. அதிமுக சிறுபான்மை பிரிவு பிரதிநிதியாக இருக்கும் அவர், பாஜக கொண்டுவந்த முத்தலாக் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தபோதும், ஓ.பி.எஸ். மகன் ரவிந்திரநாத் எம்.பி. பாஜக கொண்டுவந்த சட்டத்தை ஆதரித்துப் பேசினார். 

 

இதனை அன்வர் ராஜா அப்போதும் எதிர்த்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்தனர். சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் சி.வி. சண்முகத்திற்கும் அன்வர் ராஜாவிற்கும் தகராறு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சில நாட்களுக்கு முன்பாக ஆடியோ ஒன்று வெளியானது, அதில் எடப்பாடி பழனிசாமியை அவர் பேசிய விதம் சர்ச்சையானதாக கூறப்படுகிறது. 

 

மேலும், எப்போதும் சசிகலாவையே ஒற்றை தலைமை வேண்டும் என அன்வர் ராஜா பேசியதால் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் ஒருபோதும் அதிமுகவைவிட்டு வேறு கட்சிக்குச் செல்லமாட்டார்’ எனத் தெரிவித்தனர். 

 

அதேசமயம் அவரது நீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் இராமநாதபுரத்தின் பெரும்பாலான இடங்களி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்