தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீபிரியா, அத்தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் சென்னை சிட்டி சென்டர் எதிரில் வாக்கு சேகரித்த ஸ்ரீபிரியாவிடம், “கரோனாகாலத்துல சாப்பாட்டுக்கே வழியில்லாம இருந்தோம்.அப்பல்லாம் வராம இப்ப எதுக்கு வந்தீங்க?” என்றுஅப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisment