Skip to main content

“இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்?” - இ.பி.எஸ். விளக்கம்!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
"Why the By-Election Boycott?" - EPS Explanation

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. '

"Why the By-Election Boycott?" - EPS Explanation

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக போட்டியிடாதது குறித்து பேசுகையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அது போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. அந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் அடைப்பதுபோல் செய்து திமுகவினர் முறைகேடு புரிந்தனர்.

திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் விக்கரவாண்டி இடைத்த் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. சுதந்திரமாக இடைத் தேர்தல் நடக்காது என்பதால்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது கனவு. அவரின் கனவு பலிக்காது. தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைக்கும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் அரசியல் செய்கின்றனர்” - ஆர்.எஸ். பாரதி பதிலடி!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
RS Bharathi says Edappadi Palaniswami and BJP are doing politics

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். 

RS Bharathi says Edappadi Palaniswami and BJP are doing politics

அப்போது அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அரசு தகுந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முன்பே முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளை அழைத்து போதைப் பொருள் கட்டுப்பாடு குறித்து விவாதித்துள்ளார். கள்ளச் சாராய மரணங்களை வைத்து அதிமுக, பாஜகவினர் அரசியல் செய்கின்றனர். இந்தச் சம்பவத்தில் அரசியல் செய்யாமல் அரசியல் கட்சியினர் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தச் சம்பவம் எதிர்பாராத ஒன்று என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கூறியுள்ளார்.

சம்பவம் நிகழ்ந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இது குறித்து விவாதிக்க ஒத்துழைக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாடகமாடுகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் விவாதிக்க தயாராக இல்லை. இந்த சம்பவத்தில் நிகழும் உயிரிழப்புகளை திட்டமிட்டு அரசியல் செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. 

RS Bharathi says Edappadi Palaniswami and BJP are doing politics

மதுவிலக்கு அமலில் இருந்ததால் தமிழகத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து ஆய்வு செய்தே மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. உண்மையை புரிந்துகொள்ளாமல் மத்திய நிதியமைச்ச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார். வரலாறை முழுமையாக புரிந்துகொண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச வேண்டும். கள்ளச்சாராய மரணத்துக்கு காரணமான மெத்தனால் புதுச்சேரியில் இருந்து வந்துள்ளதால் பாஜகவுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கள்ளச்சாராய மரணத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரியது ஏன்?. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்துள்ளன. காவல்துறைக்கு அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே தமிழ்நாடு காவல்துறையை இழிவுப்படுத்தியுள்ள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி விவகாரத்தை அதிமுக, பாஜகவினர் பெரிதுப்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

‘அதிமுக குழு ஆளுநரை சந்திக்கிறது’ - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
ADMK team meets Governor Edappadi Palaniswami announcement

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியதாக தமிழக அரசைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். 

ADMK team meets Governor Edappadi Palaniswami announcement

அப்போது அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கள்ளச்சாராய மரணம் அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்றை எப்படி தடை செய்யமுடியாதோ அதே போன்று மக்கள் உணர்வுகளுக்குத் தடை விதிக்க முடியாது. அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்து முதல்வர் அடக்குமுறையைக் கையாளுகிறார்.

நான் ஒரு மருந்து பெயரைச் சொன்னேன். அந்த மருந்தை வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் என்னைக் கிண்டல் செய்கிறார். ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல. இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது. காவல் நிலையம், நீதிமன்றம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. கள்ளச்சாராய மரணம் தொடர்பான விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். அரசின் அழுத்தத்தால் தான் மாவட்ட ஆட்சியர் தவறான தகவலைக் கூறினார். 

ADMK team meets Governor Edappadi Palaniswami announcement

கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரத்திற்கு திமுக அரசு தான் காரணம். இந்த விவகாரத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு வருபவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துகிறார்கள். அடக்குமுறையை கண்டு அஞ்சுபவர்கள் அதிமுகவினர் அல்ல. கள்ளச்குறிச்சி சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் ஆனால் இங்குள்ள காவல்துறை, தனி நபர் ஆணையம் மூலம் நீதி கிடைக்காது. கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் எனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நாளை (25.06.2024) அதிமுக குழு சந்திக்கிறது” எனத் தெரிவித்தார்.