Who is the Nellai Mayor candidate Consultation of Ministers

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 16 வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த சரவணன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து இவர் நெல்லை மாநகராட்சி மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. மேலும் இது குறித்து திமுக தலைமைக்கும் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மேயருக்கு எதிராகப் புகார் மனு அளித்திருந்தனர்.

Advertisment

அதே சமயம் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை கடந்த ஜூலை மாதம் 3 ஆம் தேதி (03.07.2024) ராஜினாமா செய்திருந்தார். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் அளித்தார். இந்தக் கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.

Advertisment

இந்நிலையில் நெல்லை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை (05.08.2024) நடைபெற உள்ளது. இதனையொட்டி அடுத்த மேயர் வேட்பாளர் யார் என்று குறித்து அமைச்சர்கள் இன்று (04.08.2024) ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். புதிய மேயர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என் நேரு ஆகியோர் ஆலோசனை ஈடுபட உள்ளனர் இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ள பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மேயர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு திமுக தலைமை மூலம் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.