திருச்சி தொகுதியை இரண்டு முறை தொடர் வெற்றிபெற்ற ஆளும் கட்சியான அதிமுக, தேமுதிகவுக்கு தாரைவார்த்தது. இதனால் இரட்டை இலை சின்னம் தேர்தல் களத்தில் இல்லை.
இதனால் இரட்டை இலை வாக்குகளை வளைப்பதற்கு காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரும், அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமானும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
காரணம் இதற்கு முன்பு இரண்டு முறை வெற்றிபெற்ற எம்.பி பா.குமார். கடைசியாக நடந்த தேர்தலில் திமுக – அதிமுக நேரடியாக களத்தில் சந்தித்தனர். அந்த தேர்தலில் அதிமுக ப.குமார் 4,58,478 மற்றும் திமுக அன்பழகன் 3,08,002 முன்றாவது அணியாக இருந்து போட்டியிட்ட தேதிமுக ஏ.எம்.ஜி.விஜயகுமார் 94,785, காங்கிரஸ் சார்பில் தனித்து போட்டியிட்ட சாருபாலா தொண்டைமான் 51,537 வாக்குகளை பெற்றனர். இந்த தேர்தலில் 1.50 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் அதிமுக பா.குமார்.
திமுக நேரடியாக களத்தில் நின்றே 1.50 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதால் இந்த முறை திருநாவுக்கரசர் கை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதால் அவருக்கு கூடுதலாக வாக்குகள் வேண்டும் என்பதால் இரட்டை இலை வாக்குகளை பெற அவர் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி வருகிறார்.
அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், பிரச்சாரத்தின்போது இரட்டை இலை சின்னம் நேரடியாக போட்டியில் இல்லை. அதனால், அதற்குரிய ஓட்டுகளை ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோம் எங்கள் சின்னமான பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிடும் எனக்கே வழங்கிட வேண்டுமென்று கேட்கிறார்.
அதேபோல சாருபாலா அதிமுக கூட்டணியில் இருக்கும்போது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அப்போது இருந்தே அதிமுக பிரமுகர்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்பதும், அப்போது கோட்டதலைவராக இருந்தவர்தான் தற்போது அமமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் என்பதால் தற்போது இரட்டை இலை வாக்குகள் எல்லாம் சாருபாலவுக்கே வரும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
அதே நேரத்தில் திருநாவுக்கரசரும் தன் பங்குக்கு இரட்டை இலை சின்னம் கொண்டு வந்த எம்ஜிஆருக்கு தான் நெருக்கமானவர் என்பதாலும் இரட்டை சின்னம் திருச்சியில் போட்டியிடாததால் எனக்கே போடுங்கள் என்றும் எம்.ஜி.ஆர் காலத்து பழைய அதிமுக பிரமுகர்களிடம் தனிப்பட்ட முறையில் திருநாவுக்கரசர் பேசி வருகிறார். இந்த வாக்குகள் தனக்கு பயன்படும் என்று வெகுவாக நம்புகிறார். இப்படி முரசு சின்னத்திற்கு போக வேண்டிய வாக்குகளை இவர்கள் இருவருக்கும் இடையே இரட்டை ஓட்டுகளை வாங்க போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில், ஜெயலலிதவை இழந்து தவிக்கும் அதிமுக தொண்டர்கள் தான் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார்கள். மேலும் கண்ணுக்கு எதிரே தனக்கு வர வேண்டிய வாக்குகள் பறிபோகிறதே என்று வருந்துகிறார் தேமுதிக வேட்பாளர் தர்மபுரி மருத்துவர் இளங்கோவன்.