Skip to main content

“அன்று திமுக செய்ததையே எடப்பாடி பதவி வெறிக்காக இன்று செய்துவிட்டார்” - டி.டி.வி. தினகரன் பேட்டி

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

"What DMK did that day, Edappadi did it for the sake of office" - TTV Dinakaran interview

 

துரோகம் செய்தவர்களுக்கு மக்களும், தொண்டர்களும் விரைவில் தீர்ப்பு தருவார்கள் என அமமுகவின் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.    

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''ஒரு சிலரின் ஆணவத்தால், அகங்காரத்தால், பண திமிரால் ஜெயலலிதாவுடைய இயக்கம் மிகவும் பலவீனப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு சில சுயநலவாதிகளால் தமிழ்நாடு பாழடைந்து விட்டது. அவர்கள் செய்த தவறுகளால்தான் தீய சக்தி திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இன்று தவறான நடவடிக்கையில் சட்டசபையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவினுடைய தொண்டர்கள் சுயநலத்தால் நடைபெறும் பதவி சண்டைகளை பார்த்து எல்லோரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மையான இயக்கம் அமமுக என்பதை உணருகின்ற காலம் விரைவில் வரும். துரோகிகள் பற்றி டெல்லியில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வார்கள். துரோகிகளை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.

 

திமுக 1967 ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞர் முதலமைச்சராக வருவதற்கும் காரணமாக இருந்தவர் எம்ஜிஆர்தான். அவரையே கலைஞர் ஆணவப்போக்கில் கட்சியை விட்டு வெளியேற்றினார். அவர்களும் இதேபோல் பொதுக்குழு என்று 2,000 பேரை வைத்துக்கொண்டு பல லட்சம் தொண்டர்களை தாண்டி அவர்கள் விருப்பத்திற்கு மாறாக எம்ஜிஆரை திமுகவில் இருந்து நீக்கினார்கள். தனக்கு ஏற்பட்ட அநீதிக்காக, துரோகத்திற்காகத்தான் அவரை எதிர்த்து அதிமுகவை ஆரம்பித்தார் எம்ஜிஆர். அதனால் எந்த ஒரு நபரையும் குறிப்பிட்ட நபர்களின் ஆதரவு இருப்பதை வைத்துக்கொண்டு நீக்கக் கூடாது என்பதற்காகத்தான், குறிப்பாக தலைமைப் பதவியான பொதுச்செயலாளர் பதவிக்கு தொண்டர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் எம்ஜிஆர்.

 

ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி அந்த நிலையை மாற்றி சுயநலத்திற்காக பதவி வெறிக்காகவும் செயல்பட்டுள்ளார். துரோகம் செய்தவர்களுக்கு மக்களும், தொண்டர்களும் விரைவில் தீர்ப்பு தருவார்கள்.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.