Skip to main content

''சொன்னதைத்தான் செய்கிறோம்'' - இபிஎஸ்க்கு முதல்வர் பதில்!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

eps

 

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. நேற்று முன்தினம் (23.09.2021) திருப்பத்தூரில் தனியார் நட்சத்திர ஹோட்டலில், திருப்பத்தூர் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''திமுக என்றாலே தேர்தலில் தில்லுமுல்லு செய்யும் கட்சி. ஐந்து சவரனுக்கு குறைவாக அடமானம் வைத்தவர்களின் நகைக்கடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கியிருந்தாலும் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது அதை விட்டுவிட்டார். இப்போது கூட்டுறவு சங்கத்தில் வைத்த கடனை மட்டும் ரத்து செய்வோம் என்கிறார். அதுக்கும் ஏராளமான கண்டிஷனைப் போட்டுள்ளார். இதனால் கடன் தள்ளுபடி செய்யப்படுமா செய்யப்படாதா என்ற ஐயப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பின்பு ஒரு பேச்சு. இதுதான் திமுகவின் நிலைப்பாடு'' என்றார்.

 

 "We do what we say," the chiefminister replied to EPS

 

இந்நிலையில், 'சொன்னதைத்தான் செய்கிறோம்' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார். அதில், “திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 222 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 மாதமே ஆன நிலையில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்துகொடுத்துள்ளது திமுக அரசு'' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதல்வர் பிரச்சாரம்! (படங்கள்)

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநிலத் தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர். 

அந்த வகையில், திமுக வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி ஜி. கே.எம். காலனி, பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது,  கால்பந்து விளையாட்டு வீரர்களிடம் வாக்களிக்கும்படி, கேட்டுக் கொண்டார்.

Next Story

மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் அஞ்சலி! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
CM Tributes to Late Former Minister Indira Kumari

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திரகுமாரி (வயது 73). அப்போது தொட்டில் குழந்தை திட்டம் உருவாக இவர் முக்கிய காரணமாக விளங்கினார். இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுகவில் இவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று (15.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திரகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இந்திரகுமாரி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

CM Tributes to Late Former Minister Indira Kumari

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மறைந்த இந்திரகுமாரியின் இல்லத்திற்கு இன்று (16.4.2024) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.