Skip to main content

பதிவான வாக்குகளில் வித்தியாசம்.... விராலிமலை வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.!

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

Difference in registered votes .... Viralimalai vote counting stop

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் விஜயபாஸ்கரும், திமுக வேட்பாளராக பழனியப்பனும் போட்டியிடுகின்றனர். இன்று (02.05.2021) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே முதல் சுற்று எண்ணிக்கையின்போது ஒரு இயந்திரத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் பரபரப்பு ஏற்பட்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 

 

அதன் பிறகு அதிகாரிகள் சமாதானம் செய்த நிலையில், மீண்டும் வாக்கு எண்ணிக்கை 2வது சுற்று எண்ணத் தொடங்கிய நிலையில், அதில் 4 பெட்டிகளில் உள்ள வாக்குகளுக்கும் இவிஎம் இயந்திரத்தில் உள்ள வாக்குப்பதிவையும் பார்க்கும்போது சுமார் 3,500 வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று திமுகவினர் நிறுத்தி வைத்துள்ளனர்.

 

தொடர்ந்து இரண்டு சுற்றுகள் கூட முடிவடையாத நிலையில் ஒரு மணியைக் கடந்தும் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர்கள் இப்பொழுது வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகை தர உள்ளனர். மேலும், திமுக கட்சித் தலைமை வரை மா.செ செல்லப்பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் அதிகாரியிடமும் புகார் மனு கொடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான நீச்சல் தொட்டியில் மூதாட்டியின் சடலம்

Published on 02/10/2023 | Edited on 02/10/2023
nn

 

முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரின் தோட்டத்தில் உள்ள நீச்சல் தொட்டியில் மூதாட்டி ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ஓலைமான்பட்டியில் தோட்டத்தில் நீச்சல் தொட்டி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தின் வழியே சென்ற 83 வயது மூதாட்டி பாலாயி என்பவர் நடந்து சென்றபொழுது கால் இடறி உள்ளே விழுந்ததாகவும், இதில் மூதாட்டி இறந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

Next Story

விராலிமலையில் சாலை விபத்து; ஆம்புலன்ஸ் வராததால் மக்கள் போராட்டம்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Road accident in Viralimalai; People are struggle because the ambulance is not comingnn

                                                      கோப்புப்படம் 

புதுக்கோட்டையில் சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கார் மோதி 4 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்த நான்கு பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வரை ஆம்புலன்ஸ் வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். அதே நேரம் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்யவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கார் ஓட்டுநரை கைது செய்யக் கோரியும், ஆம்புலன்ஸ் வராததைக் கண்டித்தும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.