Skip to main content

பழங்குடி இருளர் இன மாணவிக்கு சாதி சான்று கேட்டு விடிய விடிய போராட்டம் 

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
Viluppuram

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்து உள்ளது தி. பரங்கினி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் உயர்கல்வியில் சேர ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது என்பதால் அவர் விழுப்புரம் கோட்டாட்சியருக்கு பல மாதங்களுக்கு முன்பே சாதி சான்று கேட்டு மனு செய்துள்ளார்.

 

இதில் விசாரணை செய்வதில் கால தாமதம் ஆகியுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் தனலட்சுமிக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர் இன மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கோட்டாட்சியரிடம் விவரம் கேட்டுள்ளார். கோட்டாட்சியர் அவர்கள் தனலட்சுமி குடும்பத்தினர் பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள்தானா? என்பது சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. எனவே தனலட்சுமி மனு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து மானுடவியல் பேராசிரியர் ஒருவரை வரும் 20ஆம் தேதி ஆய்வுக்கு அனுப்பி வைப்பதாக பல்கலைக்கழகத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. எனவே அங்கிருந்து வரும் பேராசிரியர் அவர்களின் ஆய்வு முடிவுக்கு பிறகு தனலட்சுமிக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று தெறிவித்துள்ளார்.

 

மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பொதுவாக பழங்குடியின மக்கள் எஸ்டி ஜாதி சான்றிதழ் கேட்கும்போது அவர்கள் குடும்பத்தில் ஏற்கனவே சான்றிதழ் பெற்றிருந்தால் அதன் அடிப்படையிலும் அவர்கள் உறவுமுறைகளின் அடிப்படையிலும் விசாரணை செய்து கோட்டாட்சியர் மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவர்கள் பழங்குடியினர்தானா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டால் பல்கலைக்கழகத்திலிருந்து மானுடவியல் பேராசிரியர்கள் நேரடியாக வந்து சம்பந்தப்பட்ட இனத்தின் மக்கள் வாழ்வியலை அவர்கள் உருவத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவதற்கு சிபார்சு செய்வார். அதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோட்டாட்சியர்கள் சான்றிதழ் வழங்குவது நடைமுறையில் உள்ளது. அதே நடைமுறையில் தான் தனலட்சுமிக்கும் மானுடவியல் பேராசிரியர் ஆய்வுக்குப் பிறகு ஜாதி சான்றிதழ் வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தனலட்சுமியின் உறவினர்கள் தனலட்சுமியின் தந்தைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடி இருளர்களுக்கான இலவச வீட்டுமனைப்பட்டா அரசு கொடுத்துள்ளது. இதேபோன்று பல்வேறு ஆதாரங்கள் இருந்தும் அவரது மகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க கால தாமதம் ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல என்கிறார்கள் தனலட்சுமிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்