விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் ஆண்டை நிறைவு செய்து இன்றோடு (02-02-25) 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் இன்று கட்சி கொடியேற்றினார்.
இதனையடுத்து, தவெகவின் கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளை இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர், தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கினார்.
ஏற்கெனவே 4 கட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த பட்டியலை வெளியிட்ட விஜய், இன்று 5ஆம் கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் பட்டியலையும் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.