Skip to main content

“பாஜக என் மனைவியை வைத்து என்னை முடக்க நினைக்கிறது” - வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Velmurugan has been a strong critic of the BJP

 

வேலூரில் நடைபெற்ற திராவிட நட்புக் கழகத்தின் மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்திக்கையில், “இந்தியாவை அமைதியின்மையை நோக்கி நகர்த்துகிறது பாஜக. தான்தோன்றித்தனமாகத் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் ஆளுநர். அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுகிறார். துணிந்து முதலமைச்சர் எடுத்த இந்த முடிவை மனதார வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

 

தமிழ்நாட்டு அரசு உயர் பதவிகளில் இன்னமும் ஒன்றிய அரசின் ஆதரவாளர்கள் கோலோச்சி வருகிறார்கள். அவர்களையும் இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆளுநர் தமிழக மக்களுக்கு எந்த மதிப்பும் அளிக்காமல் செயல்படுகிறார். அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.  2018 ஆம் ஆண்டிலிருந்து எனது மனைவி காயத்ரி கருத்து முரண்பாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. எனது அரசியலை பிடிக்காத சங்பரிவார கூட்டம். எனது மனைவிக்கு காஞ்சிபுரம் பாஜக மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்து என்னை பழிவாங்க நினைக்கிறார்கள்.

 

சங்கிகளின் கும்பலுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன். உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால் தைரியம் இருந்தால், எனது பொது வாழ்வில் லஞ்சம் வாங்கியதையோ அரசு சொத்தை கைப்பற்றியது குறித்தோ ஒரு சின்ன குற்றச்சாட்டை வைத்தோ என்னுடைய வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்ப முடியாது. நான் செய்யும் செயல்கள் சனாதன சங்கிகளின் கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. எனது மனைவிக்குப் பதவியைக் கொடுத்து எனது பொதுவாழ்வை முடக்க நினைக்கிறார்கள். இதை எதிர்கொள்ளத் துணிவு இல்லாதவர்கள் அவதூறு பரப்பி பெண்களைப் பயன்படுத்திப் பழிவாங்க நினைத்தால் விபரீதம் ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சொந்த கட்சி உறுப்பினர்களாலேயே தோற்கடிக்கப்படுவீர்கள்'- வானதி சீனிவாசன் பேச்சு 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 'You will be defeated by your own party members' - Vanathi Srinivasan speech

சொந்த கட்சி உறுப்பினர்களாலேயே தி.மு.க தோற்கடிக்கப்படும் என வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேடையில் பேசுகையில்,''மாநில சட்டப்பேரவையில் கோயம்புத்தூருக்கு ஒரு பெரிய நூலகம் ஒன்று அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவித்து இருந்தார்கள். நேற்று நான் பேசுகின்ற பொழுது 'நிதிநிலை அறிக்கையில் வெறும் நூலகம் என்று அறிவித்திருக்கிறீர்களே அதற்கு எத்தனை கோடி என்று அறிவிக்கவில்லை. எத்தனை காலம் நிர்ணயத்தில் அதை அமைக்க போகிறீர்கள்' என்று கேள்வி கேட்டேன். இன்று மாநிலத்தினுடைய முதல்வர் அவைக்கு வந்து இதற்கு மட்டும் தனியாக ஒரு பதில் கூறிச் சென்றிருக்கிறார்.

நாங்கள் நிச்சயமாக கோவையில் நாங்கள் அதை அமைப்போம். 2026ல் அந்த நூலகம் கட்டும் பொழுது அதன் திறப்பு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினரான நீங்களும் வரவேண்டும் என கூறிவிட்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நீங்கள் அமைப்பது போல நாங்கள் அமைக்க மாட்டோம் என கிண்டலாக பதில் கூறிச் சென்றிருக்கிறார்.

நாங்கள் கேட்கிறோம் ஒத்த செங்கல்லை வைத்துக்கொண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது வந்தீர்கள். உங்களுக்கு வாக்களித்து மூன்று வருடம் ஆகிறது. அந்த ஒத்த செங்கல்லை வைத்து நீங்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி விட்டீர்களா? மத்திய அரசு எந்த நேரத்தில், எந்த மாதிரி, எந்த திட்டத்தில் எடுத்துக் கொண்டுபோக வேண்டுமோ அந்த முறைப்படி எடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக ஜப்பானுக்கு சென்று பேசி விட்டு வந்தாகி விட்டது. அதனுடைய பணிகள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்கான காலதாமதம் ஏற்கெனவே அவர்களுக்கும் தெரியும். ஆனால் இப்படி இருந்தாலும் கூட இவர்களால் எவையெல்லாம் செய்ய முடியவில்லையோ அந்த பழியை எல்லாம் தூக்கி மத்திய அரசின் மீது போட்டு வசதியாக மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். திமுக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற எதிர்க்கட்சிகளால் அல்ல, உங்கள் சொந்த கட்சிக்காரர்களால் தோல்வியை தழுவப் போகிறீர்கள். ஏனென்றால் இன்று மக்களுக்கு நீங்கள் நடத்துகின்ற அராஜக ஆட்சி, நீங்கள் நடத்துகின்ற ஊழல் மீது அப்படி ஒரு வெறுப்பு'' என்றார்

Next Story

“பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி” - கே.பி.ராமலிங்கம் 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
BJp Alliance is in leadership KP Ramalingam

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. அதோடு அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கூட்டணி குறித்து தெரிவிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. இனி மாநிலக் கட்சிகள் தலைமையில் கூட்டணி இல்லை. இங்குள்ள மாநில கட்சிகள்தான் தேசிய கட்சிகளின் மீது ஏறி சவாரி செய்கின்றன. அங்கு எவ்வளவு சீட்?; இங்கு எவ்வளவு சீட்? என ஒரு சில கட்சிகள் இருபுறமும் கூட்டணி பேரத்தை பேசி வருகின்றன. எந்த கட்சியாக இருந்தாலும் அங்கு பேரத்தை முடித்து விட்டு வரட்டும். பிரதமர் மோடி தலைமையை ஏற்றால் கூட்டணி குறித்து பேசுவோம்.  பிற கட்சிகளை அவர்களின் சின்னங்களில் போட்டியிட வைத்து அங்கீகாரம் பெற்றுத்தரும் இடத்தில் பாஜக இல்லை. அடுத்த கட்சிக்கு அங்கீகாரம் பெற்றுத்தர பாஜக உழைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க. கதவுகள் திறந்தே உள்ளன. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.